அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அ.தி.மு.க. சார்பில் நகரசபையில் உள்ள 36 வார்டுகளில் 9 வார்டுகள் வீதம் 4 மண்டலங்களாக பிரித்து பூத் கமிட்டி அமைக்கும் ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் விஜய பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார் பேரவை நகரச் செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசினார்.