அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

அரக்கோணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2023-10-06 19:10 GMT

அரக்கோணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொய்பாக்கம் மற்றும் பெருமுச்சி ஆகிய பகுதிகளில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி.பழனி தலைமை தாங்கினார். ராணிபேட்டை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின், பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய இணை செயலாளர் மீனா ரகுபதி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் நரேஷ் காந்த், ஒன்றிய துணை செயலாளர் ஸ்ரீதேவி பாபு, ஒன்றிய துணை செயலாளர் ஏ.எம்.நாகராஜ், ஒன்றிய மாவட்ட பிரதிநிதி சுகுணா லோகநாதன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஏ.பி.எஸ்.லோகநாதன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் முரளி கிருஷ்ணன், மாவட்ட ஐ.டி.பிரிவு இணை செயலாளர் ஹரிஹரன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்