அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்-மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.;

Update: 2023-07-30 23:15 GMT

திருப்பரங்குன்றம், 

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

பூமிபூஜை

திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பயணிகள்நிழற்குடை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தோப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ராமமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் வேட்டையன், ஒன்றிய கவுன்சிலர் உமாதேவி போத்திராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் (பொறுப்பு) வேல்முருகன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் துரை நடராஜன், மாவட்டத் தலைவர் பொன் மகாலிங்கம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் உசிலம்பட்டி இளங்கோ, மதுரை தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்டத் தலைவர் சரவண பகவான், தோப்பூர் காசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்

நிகழ்ச்சியை தொடர்ந்து மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது,

எய்ம்ஸ் மருத்துவமனை வெறும் கல்வெட்டாகவும், செங்கலாகவும் இருக்கிறது. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் பிரதமர் நரேந்திரமோடி போட்டியிட்டால் தோல்வியில்தான் முடியும். அது அவர்களுக்கு தெரிந்த விஷயம் தான் இருந்தாலும் அண்ணாமலை ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுகிறார் என்று கூறுகிறார். பா.ஜ.க.வின் எந்த வேட்பாளர்களும் தமிழகத்தில் வெற்றி பெறப்போவதில்லை. மக்களிடம் மத்திய அரசுக்கு எதிரான மனநிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்