அ.தி.மு.க. பேனர் விழுந்து இளம்பெண் காயம்
அ.தி.மு.க. பேனர் விழுந்ததில் இளம்பெண் காயம் அடைந்தார்.;
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க சாலையில் வைப்பதற்காக ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட பேனர் சரிந்து, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த கீர்த்தனா என்பவர் மீது விழுந்தது.
இதில் அவருக்கு லேசான காயமும், காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. இதையடுத்து கீர்த்தனாவை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.