ஆதிதிராவிடர் விடுதியில் மாணவர் சேர்க்கைக்கான கூட்டம்

குடியாத்தத்தில் ஆதிதிராவிடர் விடுதியில் மாணவர் சேர்க்கைக்கான கூட்டம் நடந்தது.

Update: 2023-07-11 13:01 GMT

குடியாத்தம்

குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், காட்பாடி பகுதியில் இயங்கும் ஆதிதிராவிடர் நல மாணவ-மாணவிகள் விடுதிகளில் 2023-2024-ம் ஆண்டுக்கான மாணவ-மாணவிகள் சேர்க்கைக்காக தேர்வு குழு கூட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

குடியாத்தம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் எஸ்.சந்தோஷ் தலைமை தாங்கினார். மாணவர் தேர்வு ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கே.சாமிநாதன், குணசேகரன், விடுதி கண்காணிப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம், பேரணாம்பட்டு, காட்பாடி, பில்லாந்திப்பட்டு, அகரம்சேரி ஆகிய பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளில் 505 மாணவர்களை சேர்க்கலாம்

தற்போது 228 மாணவர்கள் உள்ளனர். காலியாக உள்ள மாணவர்களுக்கான சேர்க்கை தேர்வு கூட்டம் நடைபெற்றது இதில் 116 மாணவர்கள், 125 மாணவிகள் என 241 பேர் விடுதிகளில் தங்க தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்