மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளில் சிறப்பு பிரிவில் 28 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டது.

Update: 2023-05-30 00:30 GMT

ஊட்டி

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளில் சிறப்பு பிரிவில் 28 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டது.

மாணவர் சேர்க்கை

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் 2023-2024-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வந்தது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும நேற்று மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது.

இதேபோல் ஊட்டி அரசு கலைக்கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் www.govtartscollegeooty.org.in என்ற கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் அதன் விவரங்கள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு இருக்கிறது. நேற்று காலை காலை 9.30 மணி முதல் 11 மணி வரை முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, என்.சி.சி., மற்றும் அந்தமான் நிக்கோபார் தமிழ் மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வு நடைபெற்றது.

28 இடங்கள் ஒதுக்கீடு

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்தனர். நேரடி கலந்தாய்வு நடந்த முதல் நாளான நேற்று 28 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதில் விளையாட்டு பிரிவில் 23 பேர், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 4 பேர், முன்னாள் ராணுவ பிரிவில் ஒருவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

மாணவ-மாணவிகளுக்கான சேர்க்கை ஆணைகளை கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி வழங்கினார். இதில் உடற்கல்வி இயக்குனர் ரவி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் லெப்டினெட் ரவி, மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்