டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களின் மேல்முறையீட்டு மனு விசாரணை தள்ளிவைப்பு

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களின் மேல்முறையீட்டு மனு விசாரணை தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2022-10-17 22:13 GMT

சென்னை,

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினையில், சென்னையில் வசித்த பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையாவை கடந்த 2013-ம் ஆண்டு ஒரு கும்பல் கொலை செய்தது. இதுகுறித்து பதிவான வழக்கில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மகன்கள் வக்கீல் பாசில், என்ஜினீயர் போரிஸ், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பொன்னுசாமி உள்பட 7 பேருக்கு தூக்கு தண்டனையும், மேரி புஷ்பம், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த ஆண்டு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, தண்டனை பெற்றவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை பொன்னுசாமி அணுகியுள்ளதாக மனுதாரர்கள் தரப்பு வக்கீல் கூறினார். அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற நவம்பர் 11-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்