அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர், பொதுக்குழு தொடர்பான வழக்கில் உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் ஆகியவை பாதிப்பு ஏற்படாதவாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஓ.பன்னீர்செல்வம் கோரினார்.
அதற்கு மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தபின் அதிமுக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் விளக்கமளித்தனர்.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.