பட்டுக்கோட்டையில் இருந்து வெள்ளியங்கிரிக்கு ஆதியோகி சுவாமி ரத யாத்திரை
பட்டுக்கோட்டையில் இருந்து வெள்ளியங்கிரிக்கு ஆதியோகி சுவாமி ரத யாத்திரை கந்தர்வகோட்டைக்கு வந்தது.;
பட்டுக்கோட்டையில் இருந்து தென் கைலாய பக்தி பேரவை மற்றும் சிவாங்க பாத யாத்திரை குழுவினர் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆதி யோகி சுவாமி ரதத்துடன் வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரையாக கந்தர்வகோட்டைக்கு நேற்று வந்தடைந்தனர். இந்த ரதத்தில் ஆதியோகி திருவுருவம், 63 நாயன்மார்கள், 18 சித்தர்கள் நால்வர் திருமேனிகள், பன்னிரு திருமுறைகளின் கோவில்கள் மாதிரி வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த பாதயாத்திரை பயணம் பட்டுக்கோட்டையில் புறப்பட்டு ஏனாதி, ஊரணிபுரம், கந்தர்வகோட்டை, திருச்சி, கரூர், பல்லடம், கோவை வழியாக 7 மாவட்டங்கள், 350 கிராமங்களை கடந்து சுமார் 370 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வருகிற 16-ந்தேதி வெள்ளியங்கிரி மலையை அடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.