ஆதிவாசி மக்கள் வாயில் கருப்பு துணி கட்டி வந்ததால் பரபரப்பு
கிராம சபை கூட்டத்திற்கு ஆதிவாசி மக்கள் வாயில் கருப்பு துணி கட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
பந்தலூர்,
பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் லில்லி ஏலியாஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சந்திரபோஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், ஊராட்சி செயலாளர் சஜீத், வனச்சரகர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சேரங்கோடு, சேரம்பாடி, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, காரக்கொல்லி, எருமாடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு, புதிய தொகுப்பு வீடுகள், சாலை, நடைபாதை வசதிகள் செய்து தர வேண்டும் என்றனர். சப்பந்தோடு ஆதிவாசி மக்கள் மற்றும் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி வாயில் கருப்பு துணி கட்டி வந்தனர். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு அப்பகுதியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.