'ஆதித்யா எல்-1' விண்கலம் வெற்றி: நெல்லை அறிவியல் மையத்தில் மாணவர்கள் கொண்டாட்டம்
‘ஆதித்யா எல்-1’ விண்கலம் வெற்றியையொட்டி நெல்லை அறிவியல் மையத்தில் மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலவின் தென்துருவத்துக்கு சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டதை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்த காட்சியை நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள அறிவியல் மையத்தில் அகன்ற திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்தனர். இதனை ஏராளமான மாணவ-மாணவிகள் பார்வையிட்டு மகிழ்ந்து கொண்டாடினர். அறிவியல் மைய அலுவலர் எஸ்.எம்.குமார் மாணவர்களுக்கு ஆதித்யா-1 விண்கலத்தின் பணிகள் குறித்து விளக்கி கூறினார்.