சீமானை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்
சீமானை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
ஆதித்தமிழர் பேரவை சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அருந்ததிய சமூகத்தினரை அவதூறாக பேசியதாக நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் ஆதித்தமிழர் பேரவை மாநில செயலாளர் வீரகோபால், மக்கள் கலை இலக்கிய கழக மாநில செயலாளர் கோவன், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் உள்பட பலர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின்போது சீமானை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.