திருச்செந்தூரில் சிவந்தி கோப்பை கால்பந்து போட்டியில் ஆதித்தனார் கல்லூரி அணி வெற்றி

திருச்செந்தூரில் சிவந்தி கோப்பை கால்பந்து போட்டியில் ஆதித்தனார் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

Update: 2023-09-27 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில், கல்லூரி நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் முதலாமாண்டு கல்லூரிகளுக்கு இடையிலான சிவந்தி கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்தது. இந்த கால்பந்து போட்டியில் மொத்தம் 8 கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. இப் போட்டியில், முதல் இடத்திற்கான போட்டியினை கல்லூரி முதல்வர் சாம்ராஜ், நாசரேத் மர்க்காசிஸ் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜாசிங் ரோக்லாண்ட் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதல், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதலிடத்தையும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி 2-ம் இடத்தையும், நாசரேத் மர்க்காசிஸ் கல்லூரி 3-ம் இடத்தையும், பாளையங்கோட்டை தூயயோவான் கல்லூரி 4-ம் இடத்தையும் பெற்றன.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா வருகிற 10-ந் தேதி கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்