ஆதிரங்கம்-தலைக்காடு இணைப்பு சாலை

குண்டும், குழியுமாக காணப்படும் ஆதிரங்கம்-தலைக்காடு இணைப்பு சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-11-13 18:45 GMT

திருத்துறைப்பூண்டி:

குண்டும், குழியுமாக காணப்படும் ஆதிரங்கம்-தலைக்காடு இணைப்பு சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆதிரங்கம்-தலைக்காடு இணைப்பு சாலை

திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யத்துக்கும், உம்பளச்சேரிக்கும் செல்ல ஆதிரங்கம்-தலைக்காடு இணைப்பு சாலையில் தான் பயன்படுத்த வேண்டும். இந்த சாலையை ஆதிரங்கம், சேகல், தலைக்காடு, கொறுக்கை, சேவியக்காடு, மற்றும் வடபாதி, தென்பாதி, பிச்சன்கோட்டகம், கட்டிமேடு, மேலமருதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கொறுக்கை ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இ்்ங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கண்ட பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு மாணவ-மாணவிகள், ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள், வேலை செல்பவர்கள் உள்பட பலர் சென்று வருகின்றனர். புகழ்பெற்ற ஆதிரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலுக்கு செல்பவர்கள் இந்த வழியாக தான் செல்ல வேண்டும்.

குண்டும், குழியுமாக காணப்படுகிறது

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தடுமாறி கிழே விழுந்து காயம் அடைக்கின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிரமப்பட்டு செல்லும் நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இதுவரை இன்னும் இந்த சாலை சீரமைக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும்.

இதுகுறித்து ஆதிரங்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன் கூறுகையில், ஆதிரங்கம் தலைக்காடு இணைப்பு சாலை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது சேதமடைந்து கிடக்கும் சாலை, மத்திய அரசின் பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சீரமைக்க வேண்டும்.ஊராட்சி மன்றத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும், இன்னும் சீரமைக்கவில்லை. காலதாமதம் இன்றி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சீரமைக்க வேண்டும்

சேகல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி:-

தலைக்காடு ஆதிரங்கம் இணைப்புச்சாலையால் சேகல் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமல்லாது நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்