ஆதி தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆதி தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதி தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட சிலைமையப்பட்டி கிராமத்தில் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு மயான பாதை கேட்டு போராடிய கட்சியின் மாநில நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். மேலும் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநிலச்செயலாளர் பழனிகுமார், மாநிலக்குழு உறுப்பினர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் சக்கணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆதிதமிழர் கட்சியின் மாநில துணை அமைப்பு செயலாளர் தமிழ் வீரன் நிறைவுரையாற்றினார். இதனைத் தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.