ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் தொடங்க மானியம்
அரசின் தாட்கோ நிறுவனம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தொழில் தொடங்க மானியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் தாட்கோ நிறுவனம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தொழில் தொடங்க மானியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மானியத்தை பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள 18 முதல் 65 வயதுடைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பான் கார்டு, ஜி.எஸ்.டி. எண், அடையாள சான்றுடன் விண்ணப்பிக்கலாம். தாட்கோ மாவட்ட தேர்வு குழு மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட பயனாளிக்கு தமிழக அரசின் டான்செம் சிமெண்டு நிறுவன முகவருக்கான விண்ணப்பம் வழங்கப்படும். அதில் தேர்வு செய்யப்படும் ஆதிதிராவிட விண்ணப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகையுடன், திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பழங்குடியினருக்கு திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன் பெற ஆதிதிராவிடர் http://application.tahdco.com என்ற இணையதளத்திலும் பழங்குடியினர் http://fast.tahdco.com/ என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்