ஆதார் சேவை- தபால் சேமிப்பு கணக்கு தொடங்கும் முகாம்

தஞ்சை மாவட்டத்தில் ஆதார் சேவை மற்றும் தபால் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான முகாம் நாளை தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை நடைபெறுகிறது என்று முதுநிலை தபால் கண்காணிப்பாளர் கூறி உள்ளார்.

Update: 2023-06-03 19:15 GMT

தஞ்சை மாவட்டத்தில் ஆதார் சேவை மற்றும் தபால் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான முகாம் நாளை தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை நடைபெறுகிறது என்று முதுநிலை தபால் கண்காணிப்பாளர் கூறி உள்ளார்.

ஆதார் சேவை முகாம்

தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட தண்டாங்கோரை, சூலமங்கலம் (பசுபதிகோவில்), சூழியக்கோட்டை (சாலியமங்கலம்), வளப்பக்குடி, முள்ளுக்குடி (திருக்காட்டுப்பள்ளி), வைத்தியநாதன்பேட்டை (தில்லைதானம்), உடையாளூர், சந்திரசேகரபுரம் (வலங்கைமான்), திருச்சோற்றுத்துறை (கண்டியூர், திருவையாறு தியாகராஜகாலனி ஆகிய கிராமங்களில் கிராம பஞ்சாயத்து உதவியுடன் சிறப்பு ஆதார் சேவை மற்றும் இதர சேமிப்பு கணக்குகளுக்கான முகாம் பொதுமக்களுக்குசேவை செய்யும் வகையில் தபால்துறையால் நடத்த திட்டடமிடப்பட்டுள்ளது..

இந்த முகாம் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் தபால் சேமிப்பு கணக்குகள் தொடங்குதல், மகளிருக்காக மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மகளிர் மேன்மை திட்டம் (உயர்ந்த வட்டி விகிதம் கொண்ட 2 வருட சேமிப்பு பத்திரம்), ஆதார் சேவைகள், தபால் ஆயுள் காப்பீடு மற்றும் தபால்துறையின் மூலம் வழங்கக்கூடிய இதர சேவைகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.

திருத்தம் செய்தல்

எனவே நாளை முதல் 14-ந்தேதி வரை மேற்குறிப்பிட்டுள்ள கிராமங்களில் சிறப்பு ஆதார் சேவை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. இதில் புதிதாக ஆதார் பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், செல்போன் எண் இணைத்தல் போன்ற சேவைகளும் செயல்படுத்தப்பட உள்ளன. பொதுமக்கள் அனைவரும் தங்களின் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இந்தசேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்