கோவையில் கூடுதலாக தாலுகாக்கள் உருவாக்கப்படும்
கோவையில் கூடுதலாக தாலுகாக்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினாா்.
கோவையில் கூடுதலாக தாலுகாக்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினாா்.
பணி ஆய்வுக்கூட்டம்
வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடை பெற்றது. இதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செல்தில்பாலாஜி முன்னிலை வகித்தார்.
இதில் வருவாய் துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், வருவாய் நிர்வாக ஆணையர், கூடுதல் தலைமை செய லாளர் எஸ்.கே.பிரபாகர், நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகரா ஜன், சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையர் வெங்கடாச்சலம், வருவாய் நிர்வாக இணை ஆணையர் ஜான் லூயிஸ், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர் மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதியோர் உதவித்தொகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு உள்ளோம்.
முதியோர் உதவித்தொகை, பட்டா வழங்குதல், பட்டா மாறுதல் போன்ற எந்தவிதமான கோரிக்கைகளுக்கும் தாலுகா அலுவலகத்துக்கு மக்கள் சென்று வீணாக அலையக்கூடாது.
இதற்காக தான் ஆன்லைன் வசதியை ஏற்படுத்தி உள்ளோம். அதை மக்கள் முடிந்தளவு பயன்படுத்த வேண்டும்.
கோவைக்கு நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும். அதற்காக நிலங்களை உடனே எடுத்து கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத் தப்பட்டு உள்ளது. தகுதி இருப்பவர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
கோவை மாவட்டத்தில் புதிதாக 6 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டு உள்ளார். அதை வழங்குவதாக அவரிடம் வாக்குறுதி அளித்துள்ளோம்.
தாலுகா அலுவலகங்கள்
கோவை மாவட்டத்துக்கு கூடுதலாக தாலுகா அலுவலகம் வேண் டும் என கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். எனவே வரும் நிதியாண்டின் பட்ஜெட் கூட்டத் தொடரில் கோவை மாவட்டத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தாலுகா அலுவலகங்கள் அமைப்பதற்கான பணியை செய்து கொடுப்போம்.
தமிழகத்தில் இ-சேவை மையங்களில் சில தவறுகள் நடப்பதாக கவனத்துக்கு வந்து உள்ளது. அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசின் அனுமதியின்றி கேரளா அரசு தமிழக எல்லைகளில் நிலஅளவீடு செய்ய கூடாது. இந்த விவகா ரத்தில் மாவட்ட கலெக்டர்கள் கவனமுடன் இருக்க முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
111 பயனாளிகளுக்கு உதவி
தொழிற்பேட்டை அமைக்க யாரையும் கஷ்டப்படுத்தி நிலம் எடுப்பதில்லை. கோவை விமானநிலைய விரிவாக்க பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. கிராம உதவியாளர் பணியிடம் தொடர் பாக முறைகேடு நடந்து இருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வீட்டுமனைபட்டா, தையல் எந்திரம், வேளாண் கருவிகள் என 111 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.