உத்தமர் காந்தி தேசிய விருது வழங்க கூடுதல் இயக்குனர் ஆய்வு

வாங்கூர் ஊராட்சிக்கு உத்தமர் காந்தி தேசிய விருது வழங்க கூடுதல் இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-06-11 16:36 GMT

சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாங்கூர் ஊராட்சியை சிறந்த ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருதுக்கு பரிந்துரை செய்வது குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குனர் செல்வி ராஜஸ்ரீ ஆய்வு செய்தார். திடக்கழிவு திட்டம், சமூக பாதுகாப்பு, பள்ளி மற்றும் அங்கன்வாடி, சுகாதாரம், மற்றும் ஊராட்சி மன்றத் தலைவரின் புதுமையான முயற்சி, ஊராட்சியில் செய்யப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, வஜ்ரவேல், வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி, சுற்று சூழல் அணி பெரியசாமி, வட்டார ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார், ஊராட்சி செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர், அங்கன்வாடி பணியாளர், மகளிர் குழு உறுப்பினர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்