அரகண்டநல்லூர் பேரூராட்சியில் கூடுதல் இயக்குனர் ஆய்வு

அரகண்டநல்லூர் பேரூராட்சியில் கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தாா்.

Update: 2023-04-29 18:45 GMT

அரகண்டநல்லூர்:

தமிழக அரசின் பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி, அரகண்டநல்லூர் பேரூராட்சியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரகண்டநல்லூர் பேரூராட்சியில் குப்பைகள் சேகரிக்கும் பணி, உரம் தயாரிக்கும் பணி முறையாக நடைபெறுகிறதா? என்பதை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், 100 கிலோவிற்கு மேல் குப்பைகளை உற்பத்தி செய்பவர்களை கண்டறிந்து அந்த நபர்களிடம் கூடுதல் சேவை கட்டணம் வசூலிக்க வேண்டும். குப்பை சேகரிக்கும்போதே தரம் பிாித்து வாங்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து அவர், ரூ.47 லட்சம் செலவில் கருவன்குளம் புனரமைப்பு பணியை பார்வையிட்டார். ஆய்வின்போது அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு, உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் அருள்குமார் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்