சேலம் வழியாக செல்லும் 3 ரெயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு
விழா காலங்களில் சேலம் வழியாக செல்லும் 3 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.;
சூரமங்கலம்:-
சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் விழாக்காலங்களில் பயணிகளின் வசதிக்காக ரெயில்வே நிர்வாகம் முக்கிய வழி தடங்களில் ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கி வருகிறது.அந்த வகையில் தற்போது கீழ் கண்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கப்பட உள்ளன. அதன்படி சேலம், கரூர் வழியாக செல்லும் சென்னை சென்ட்ரல்- போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 20601) நேற்று முதல் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைத்து இயக்கப்படுகிறது,
இதேபோல் மறு மார்க்கத்தில் கரூர், சேலம் வழியாக செல்லும் போடிநாயக்கனூர்- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 20602) மற்றும் கன்னியாகுமரி-புனே எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16382) ரெயில்களில் இன்று (சனிக்கிழமை) முதல் கூடுதலாக 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைத்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.