கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.

Update: 2023-02-15 21:41 GMT

நெல்லை மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு நடைபெறும் திட்டப்பணிகளை தமிழ்நாடு பல்நோக்கு திட்ட அலகு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் டி.எஸ்.ஜவகர் நேற்று ஆய்வு செய்தார். பாப்பாக்குடி, அம்பை, கடையம் ஆகிய வட்டாரங்களில் உள்ள 1,000 விவசாயிகளால் முக்கூடலில் இயங்கி வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவன பணிகளை ஆய்வு செய்தார்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தங்களின் விவசாய உறுப்பினர்களிடமிருந்து, விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களை கொள்முதல் செய்ததின் மூலம் ரூ.1 கோடிக்கு மேல் வணிக பரிவர்த்தனை செய்துள்ளதை பாராட்டினார். கடனா நதி உபவடி நீர்ப்பகுதியிலுள்ள குளங்களையும் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு பராமரிக்க வழங்குவதால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கிடைக்கும் பயன்களை விபரமாக கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது வேளாண் வணிக ஆலோசகர் ராஜசேகரன், நெல்லை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) பூவண்ணன், வேளாண்மை அலுவலர் மாரியப்பன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முத்துராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்