வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்

கடலூா் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2022-11-12 18:45 GMT

கடலூர், 

2023-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந் தேதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை பெறப்படுகிறது. இதற்கிடையே கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், கடலூர், திட்டக்குடி, பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 227 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வெளிமாவட்டங்களில் இருந்து கடலூருக்கு இடம் பெயர்ந்தவர்கள், வார்டுகளுக்குள் இடம் பெயர்ந்தவர்கள், பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு ஆர்வமுடன் சென்று விண்ணப்பித்தனர். இந்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதேபோல் வருகிற 26, 27-ந் தேதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்கள் நடைபெற உளளது.

Tags:    

மேலும் செய்திகள்