சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடிகை சாய் பல்லவி சாமி தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடிகை சாய் பல்லவி குடும்பத்தினருடன் இன்று சாமி தரிசனம் செய்தார்.;

Update: 2022-09-04 13:51 GMT

கடலூர்,

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சாய் பல்லவி குடும்பத்தினருடன் இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார்.

கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசனம் செய்தார். நடிகை சாய் பல்லவி கோயிலுக்கு வந்திருந்த செய்தி அறிந்து ஏராளமான பக்தர்கள் ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். போலீசார் உதவியுடன் சாமி தரிசனம் முடித்து அவர் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்