பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளார்
சென்னை,
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளார். சென்னை, மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் வரும் ஜூன் 3ம் தேதி அவர் சந்திக்க உள்ளார்
தொகுதிக்கு 6 மாணவர்கள், 2 பெற்றோர்கள் என 234 தொகுதிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட சுமார் 6,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்டுகிறது.