நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்; தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து...!
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.;
சென்னை,
நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான ரஜினிகாந்த் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்கள் மீது வைத்திருக்கும் மட்டற்ற அன்பும் நிலைத்திருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.