நடிகர் ராஜேந்திரநாத் கார் கண்ணாடி உடைப்பு

முக்கூடலில் நடிகர் ராஜேந்திரநாத் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.;

Update: 2022-06-14 20:34 GMT

நெல்லை:

நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்தவர் நடிகர் ராஜேந்திரநாத். இவர் நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் ஒரு மனு கொடுத்தார்.

அந்த மனுவில், 'நான் முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலுக்கு குடும்பத்தோடு சாமி கும்பிட சென்றேன். அப்போது அங்கு திருவிழாவிற்காக வெள்ளை அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம், பூசாரியிடம் அனுமதி வாங்கி விட்டீர்களா என்று கேட்டேன். உடனே அங்கிருந்த சிலர் என்னை அவதூறாக பேசி அடிக்க வந்தனர். இதுகுறித்து நான் முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். பின்னர் காரில் வந்து கொண்டிருந்தபோது, எனது காருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காரின் கண்ணாடியில் கல்லை எறிந்து உடைத்து விட்டனர். எனவே, கார் கண்ணாடியை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்