கடலாடி யூனியனை இரண்டாக பிரிக்க நடவடிக்கை-அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

கடலாடி யூனியனை இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.;

Update:2022-08-21 23:09 IST

முதுகுளத்தூர்,

கடலாடி யூனியனை இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

கிருஷ்ண ஜெயந்தி விழா

முதுகுளத்தூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்ட திட்ட பணிகள் அனைத்தும் தற்போது தி.மு.க. அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. முதுகுளத்தூர் தொகுதி ஒரு முன்னேறிய தொகுதியாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடலாடி யூனியன் இரண்டாக பிரிக்கப்படும்

கமுதியில் ரூ.61 கோடி மதிப்பில் பைபாஸ் ரோடு, ரூ.7 கோடி மதிப்பில் முதுகுளத்தூர் புறவழிச்சாலை உள்ளிட்ட திட்ட பணிகள் நடைபெற உள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்திலேயே மிகப்பெரிய யூனியனாக கடலாடி உள்ளது.

இதில் 60 கிராம பஞ்சாயத்துக்கள், 25 ஒன்றிய கவுன்சிலர் உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியமாக செயல்பட்டு வருகிறது. இந்த யூனியனை இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், முன்னாள் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பெருநாழி போஸ், சோனை மீனா, கலைக் கல்லூரி தாளாளர் ரெங்கநாதன், பரமக்குடி தொழிலதிபர் ராமு யாதவ், ஒன்றிய செயலாளர் பூபதிமணி, கோவிந்தராஜ், கடலாடி ஆறுமுகவேல், சாயல்குடி குலாம், ஜெயபால், அண்ணாமலை, எஸ்.வாகைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னலாடை நிறுவனம்

கடலாடியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறும் போது,

கடந்த காலங்களில் பிற மாவட்டங்களில் இருந்து ராமநாதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வேலைக்கு வருபவர்கள் தங்களுக்கு தண்டனை காலமாக கருதி வந்தனர். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாறுதலாகி வரும் அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுக்கு வசந்த காலமாக நினைத்து வருகிறார்கள் அவர்கள் மட்டும் இன்றி இடம் பெயர்ந்த ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மீண்டும் தங்களது சொந்த மாவட்டத்திற்கு திரும்பும் நிலைக்கு வந்துள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தண்ணீரே இல்லாத ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் தாக்கத்தை தீர்த்துள்ளது.

கடலாடி பகுதியில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு விரைவில் பின்னலாடை நிறுவனம் ெதாடங்க நடவடிக்கை எ டுக்கப்படும். முதுகுளத்தூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்