பா.ஜனதாவினருக்கு கொலை மிரட்டல்: மாநகராட்சி மேயர் மீது நடவடிக்கை எடுக்்க ேவண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
பா.ஜனதாவினருக்கு கொலை மிரட்டல் விடுதத் மாநகராட்சி மேயர் மீது நடவடிக்கை எடுக்்க ேவண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
நாகா்கோவில்:
நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மேயர் மகேஷ் பா.ஜனதாவினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறி பா.ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மேலும் மேயர் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். நேற்று முன்தினம் பா.ஜனதா கட்சியினர் கோட்டார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் நேற்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் தேவ், மாநில செயலாளர் மீனாதேவ், கவுன்சிலர்கள், மாநகர பார்வையாளர்கள் நாகராஜன், அஜித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் பா.ஜனதாவினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செம்மாங்குடி ரோட்டில் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டம் முடிந்ததும் மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அப்போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.