தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

லியோ பட சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்து உள்ளது. தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-10-17 18:33 GMT

ராமநாதபுரம்,

தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் கூடுதல் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் லியோ படம் திரையிடப்படும் தியேட்டர்களில் நாளை(வியாழக்கிழமை) முதல் 24-ந்தேதி வரை தினமும் அதிகபட்சம் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி இரவு 1.30-க்கு முடிவடையும் வகையில் 5 காட்சிகள் திரையிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் மற்றும் பிற விதிமுறை மீறல் இருந்தால் இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு குழு மூலம் கண்காணிக்கப்படும்.

திரையரங்குகளில் சுகாதாரம், பாதுகாப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பார்வையாளர்கள் சிரமமின்றி வந்து செல்ல போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சரியான பாதை, வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட வேண்டும். வாகன நிறுத்த கட்டணம் அரசு நிர்ணயம் செய்தபடி வசூல் செய்யப்பட வேண்டும். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் தமிழ்நாடு திரையரங்குகள் ஓழுங்குமுறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் 8300175888 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்