லஞ்சம் பெற்ற போலீசார் மீது நடவடிக்கை

லஞ்சம் பெற்ற போலீசார் மீது நடவடிக்கை

Update: 2022-12-05 14:29 GMT

திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் கிஷோர்குமாரின் பொக்லைன் எந்திரத்தை பொய்புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் பறிமுதல் செய்ததுடன், அங்குள்ள சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் ஆகியோர் ரூ.7 ஆயிரத்தை மிரட்டி லஞ்சமாக பெற்றுள்ளனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆனால் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர், கிஷோர்குமாரை அழைத்து புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டுகிறார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலையில் எங்கள் பொறுப்பாளர் கீராவிடம், பிரேத பரிசோதனை அறிக்கையை பெறுவதற்காக உடுமலை காவலர் ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றுள்ளார். இதுகுறித்தும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்