உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் இயக்கினால்

உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2023-08-29 21:19 GMT

ராஜபாளையம்,

உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்தார்.

லாரி பறிமுதல்

ராஜபாளையத்தில் விதிகளை மீறும் வாகனங்களால் விபத்து ஏற்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோவன் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா, ரெயில்வே பீடர் ரோடு ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது உரிய ஆவணங்கள் இல்லாத ஆட்டோ 1, லாரி 2 ஆகியவற்றை பறிமுதல் செய்து வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். மேலும் 10 வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.56 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஆட்டோக்களில் அதிகமான பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லக்கூடாது. உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி பூர்ணகலா தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது உரிய ஆவணமின்றி வந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஆட்டோக்களில் ஏற்றி வந்த டிரைவர்களை எச்சரித்து அனுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்