மாணவிகளுடன் தகராறு செய்யும் மதுபிரியர்கள் மீது நடவடிக்கை

மாணவிகளுடன் தகராறு செய்யும் மதுபிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2023-08-25 19:02 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பம், கவணை கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் உள்ள மாணவ-மாணவிகள் விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள செம்பளக்குறிச்சி பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ் ஏறுகிறார்கள். அவ்வாறு பஸ் நிறுத்ததிற்கு வரும் மாணவிகளுடன், மதுபிரியர்கள் வீண் தகராறு செய்கிறார்கள். இது குறித்து கிராம மக்கள், பா.ம.க. முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் திருஞானம், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல், நகர தலைவர் வக்கீல் சிவசங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வ மணிகண்டன், மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோர் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜியிடம் புகார் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்