10, 11-ம் வகுப்பு தேர்வில் விஸ்டம் பள்ளி மாணவர்கள் சாதனை
10, 11-ம் வகுப்பு தேர்வில் கடையநல்லூர் விஸ்டம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.;
கடையநல்லூர்:
கடையநல்லூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10, 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்து உள்ளனர். 11-ம் வகுப்பு தேர்வில் அகமது ரிஸ்வான் 579 மதிப்பெண்களும், அப்ரீனா 555 மதிப்பெண்களும், பாஹீமா 553 மதிப்பெண்களும் பெற்றனர். 10-ம் வகுப்பு தேர்வில் ஆதில், தஸ்லிம் பாத்திமா ஆகியோர் 482 மதிப்பெண்களும், அர்ஷபா 473 மதிப்பெண்களும், அல்பியா 471 மதிப்பெண்களும் பெற்றனர்.
சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் ஜெய்லானி, பள்ளியின் ஆலோசகர்கள் மைதீன் பிள்ளை, சேக் உதுமான், முதன்மை முதல்வர் பேராசிரியர் அப்துல் கனி மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.