மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை
மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
இட்டமொழி:
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்காக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 9, 10-ஆம் வகுப்பு பிரிவில் நாட்டுப்புற நடனத்தில் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர். சென்னையில் நடந்த பாிசளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி பேசினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசுகள் வழங்கி பாராட்டினார். மாணவிகளுக்கு பயிற்சி அளித்த ஆசிரியை இசபெல்லா செல்லகுமாரி பங்குபெற்ற மாணவிகள் சுமித்ரா, திவ்யா, சீதாலெட்சுமி, வள்ளி, பிரியா, இசைவாணி, அபிநயா, முத்துகலா ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்டினா ஜெபராணி, உதவி தலைமை ஆசிரியர் அழகுலிங்கம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.