பிளஸ்-2 தேர்வில் பள்ளி மாணவர்கள் சாதனை
பிளஸ்-2 தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.;
பிளஸ்-2 பொதுத்தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 20 மாணவ- மாணவிகள் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் ஐஸ்வர்யா, அனுஷ்யா ஆகியோர் 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், ஹர்ஷினி 586 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், சிவரஞ்சனி 583 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர். தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் 60 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
கணினி அறிவியல் பாடத்தில் 15 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 15 மாணவர்களும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 4 மாணவர்களும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 4 மாணவர்களும், வணிகவியல் பாடத்தில் 4 மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 3 மாணவர்களும், வணிக கணிதம் பாடத்தில் 2 மாணவர்களும், உயிரியல் பாடத்தில் 2 மாணவர்களும், கணித பாடத்தில் ஒரு மாணவரும் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஒரு மாணவர் 3 பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும், 8 மாணவர்கள் 2 பாடங்களில் 100 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் ஆர்.ஜே.வி. பெல், செயலாளர் கஸ்தூரி பெல், தலைமை ஆசிரியர் ஸ்டீபன் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் பாராட்டினர்.