அரசு பள்ளி மாணவிகள் சாதனை

மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி: அரசு பள்ளி மாணவிகள் சாதனை

Update: 2022-12-03 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பொரசப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினார்கள். இதில் கூடைப்பந்து போட்டியில் மாணவிகள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர். இவர்கள் வருகிற பிப்ரவரி மாதம் திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் விளையாட்டுப் போட்டியில் சாதனை புரிந்த மாணவ-மாணவிகளை ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்கார்த்திகேயன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். அப்போது தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் உதவி ஆசிரியர்கள் ஏழுமலை, தனசீலி, பாத்திமாமேரி, சந்தியாகுராஜ், சார்லஸ், கித்தேரி, ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்