பாலிடெக்னிக் கல்லூரியில் சாதனையாளர்கள் விழா

பாவூர்சத்திரம் பாலிடெக்னிக் கல்லூரியில் சாதனையாளர்கள் விழா நடந்தது.

Update: 2023-04-24 19:00 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வேலாயுத நாடார் லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வியாண்டிற்கான சாதனையாளர்கள் விழா நடைபெற்றது. கல்லூரியின் நிர்வாக இயக்குனர்கள் எம்.எஸ்.பி.வி.கே. லெட்சுமி ஆனந்த், ராஜலெட்சுமி ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கல்லூரி முதல்வர் ரமேஷ் மற்றும் ஆலோசகர் டி.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். எலக்ட்ரிக்கல் துறைத்தலைவர் ஆன்ட்ரோ உர்சல் ஜெப்ரி வரவேற்று பேசினார். விழாவில் ஆவுடையானூர் அரசுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவதாசன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் கிருபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினர். விழாவில் ஒவ்வொரு துறையிலும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டனர். கம்ப்யூட்டர் துறைத்தலைவர் அசோக்ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்