திருக்கோவிலூர், காணையில் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் பா.ஜ.க.வினர் வழங்கினர்
திருக்கோவிலூர், கா ணையில் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரத்தை பா.ஜ.க.வினர் வழங்கினர்.;
திருக்கோவிலூர்,
மத்திய அரசின் சாதனை திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில், விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தில் பா.ஜ.க.வினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இதற்கு தமிழக பா.ஜ.க. மாநில தரவு மேலாண்மை பிரிவு செயலாளர் திருக்கோவிலூர் தொழிலதிபர் ஆர்.கார்த்திகேயன் தலைமை தாங்கி, பட்டியல் இன மக்களிடம் துண்டுபிரசுரங்களை வழங்கினார். அதன்படி, பனமலைபேட்டை, அத்தியூர், உடையாநத்தம், வெள்ளையன்பட்டு, உமையாள்புரம், அத்தியூர் திருக்கை, திருகுணம், அன்னியூர், செம்மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கி, பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார். இதில் பா.ஜ.க மண்டல தலைவர் அய்யனார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர்
இதேபோல் திருக்கோவிலூர் நகர பா.ஜ.க. சார்பில் சைலோம் பகுதியில் நகர பா.ஜ.க. தலைவர் எஸ்.டி.புவனேஸ்வரி தலைமையில் பட்டியல் இன மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரச்சார பிரிவு மாநில துணைத்தலைவர் விநாயகமூர்த்தி, தரவு மேலாண்மை பிரிவின் மாநில செயலாளர் திருக்கோவிலூர் தொழிலதிபர் ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாதனை திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி பட்டியல் இன மக்களின் ஆதரவை திரட்டினர்.
நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் பத்ரி, ராஜாஜி, சங்கர், வாசு, சண்முகவடிவேல், லலிதா, சுரேஷ், பத்மாபழனி, ராமலிங்கம், பாலு, வீரபாரதி, திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.