மரங்களை ஏற்றி செல்லும் டிராக்டர்களால் விபத்து அபாயம்

பட்டிவீரன்பட்டி பகுதிகளில் மரங்களை ஏற்றி செல்லும் டிராக்டர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.;

Update: 2023-10-01 22:00 GMT

பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தென்னந்தோப்புகள் உள்ளன. இந்த தோப்புகளில் காய்க்கும் தன்மையை இழந்த தென்னை மரங்களை வெட்டி அகற்றிவிட்டு புதிய தென்னங்கன்றுகளை விவசாயிகள் நட்டு வைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தென்னந்தோப்புகளில் வெட்டி அகற்றப்பட்ட தென்னைமர கட்டைகளை டிராக்டர்கள் மூலம் செங்கல் சூளைகளுக்கும், வணிக பயன்பாட்டுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அனுப்பப்படும் மரக்கட்டைகள் அதிக நீளம் கொண்டதாக இருக்கின்றன. அவற்றை டிராக்டரில் ஏற்றிச்செல்லும் போது பின்னால் வரும் வாகனங்கள் மரக்கட்டைகளில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டிராக்டர்களில் ஆபத்தான முறையில் தென்னைமர கட்டைகளை ஏற்றிச்செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்