விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், துணை அலுவலர் வெட்டும் பெருமாள், சேரன்மாதேவி தீயணைப்பு நிலைய அலுவலர் வரதராஜ் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர்.
பள்ளி செயலாளர் காமராஜ், முதல்வர் மரிய ஹெலன் சாந்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.