விபத்தில் படுகாயம் அடைந்த விவசாயி சாவு
விபத்தில் படுகாயம் அடைந்த விவசாயி இறந்தார்.;
வேதாரண்யம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட மறைஞாயநல்லூர் மாகாளிக்காடு பகுதியை சோ்ந்தவர் சிங்காரவேல் (வயது85). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டிலிருந்து பொருட்கள் வாங்க கடைக்கு செல்வதற்காக வேதாரண்யம்-கரியாப்பட்டினம் சாலையில் பெட்ரோல் பங் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே முதலியார்தோப்பு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவா் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியதில் சிங்காரவேல் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ேநற்று சிங்காரவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இங்கர்சால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.