பஸ் சக்கரத்தில் சிக்கி பூச்செடி வியாபாரி சாவு

பஸ் சக்கரத்தில் சிக்கி பூச்செடி வியாபாரி இறந்தார்.;

Update: 2022-11-01 19:52 GMT

விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது50). இவர் மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் பட்டுக்கோட்டையை அடுத்த கொண்டிக்குளம் கிராமத்தில் தங்கி இருந்து குரோட்டன்ஸ், ரோஜா போன்ற பூச்செடிகளை வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் அந்த பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது ஆட்டோ மோதி கீழே விழுந்தார். அப்போது வேகமாக வந்த தனியார் பஸ் அவர் மீது ஏறியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மாரிமுத்துவின் உடலைக் கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்