நாட்டு வெடி ஆலையில் விபத்து: சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் சாவு

புதுக்கோட்டை அருகே நாட்டு வெடி ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியானார்.;

Update: 2023-08-04 20:24 GMT

புதுக்கோட்டை அருகே வெள்ளனூர் அடுத்துள்ள பூங்குடியில் நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையில் கடந்த 30-ந் தேதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் வெடி தயாரிக்கும் கூடத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடிகள் வெடித்து நாலாபுறமும் சிதறின. இதில் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உரிமையாளர் வைரமணி, தொழிலாளர்கள் வீரமுத்து (வயது 31), திருமலை, சுரேஷ், குமார் ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் படுகாயமடைந்தவர்களில் கோவில்பட்டியை சேர்ந்த வீரமுத்து சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இந்தநிலையில் கோவில்பட்டியை சேர்ந்த திருமலை (30) என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. படுகாயம் அடைந்த 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்