திம்பம் மலைப்பாதையில் திருமண கோஷ்டியினர் ெசன்ற சரக்கு வேன் கவிழ்ந்தது- 6 பேர் படுகாயம்

திம்பம் மலைப்பாதையில் திருமண கோஷ்டியினர் ெசன்ற சரக்கு வேன் கவிழ்ந்தது- 6 பேர் படுகாயம்

Update: 2023-05-21 22:07 GMT

சத்தியமங்கலம்

கர்நாடக மாநிலம் இருளூர் என்ற கிராமத்தில் இருந்து திருமண கோஷ்டியினர் 13 பேர் சரக்கு வேன் மூலமாக கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் நடக்கும் திருமணத்துக்கு நேற்று மதியம் சென்று கொண்டிருந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை 4-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திடீரென சரக்கு வேனின் டயர் வெடித்து கவிழ்ந்தது. இதில் சரக்கு வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி சடையம்மாள் (வயது 54), தேவிகா (39), வீரம்மாள் (65), விக்ரம் (23), தனலட்சுமி, நிதின் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் விக்ரம், நிதின் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்