காரின் மீது புளியமரம் விழுந்து விபத்து

Update: 2023-05-16 18:49 GMT

ராயக்கோட்டை:

ராயக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரம் உள்ள புளிய மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை நாகமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த புளிய மரத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி வெட்டினர். அப்போது அந்த வழியாக வந்த கார் மீது புளிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில் காரில் இருந்த ஓசூர் தின்னூரை சேர்ந்த சேகர் (வயது 26), அவருடைய தாய் மற்றும் 5 வயது மகன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். எனினும் மரம் விழுந்ததில் கார் சேதம் அடைந்தது. இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்