புஞ்சைபுளியம்பட்டியில் காயம் அடைந்தவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது; டிரைவர் காயம்

புஞ்சைபுளியம்பட்டியில் காயம் அடைந்தவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது; டிரைவர் காயம்;

Update: 2022-12-19 21:15 GMT

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் அரவிந்தன் (வயது 24). இவர் நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் நீலிபாளையம் அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நபர்களை மீட்பதற்காக ஆம்புலன்சை ஓட்டி சென்றார். புஞ்சைபுளியம்பட்டி கோவை மெயின் ரோட்டில் சென்றபோது அங்கிருந்த பெட்ரோல் பங்கில் இருந்து வெளியே வந்த லாரியும், ஆம்புலன்சும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் அரவிந்தன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்