புதன்சந்தையில் கிரேன்- அரசு பஸ் மோதல்; 6 பேர் காயம்

Update: 2022-12-19 18:45 GMT

சேந்தமங்கலம்:

ராசிபுரத்தில் இருந்து நாமக்கல் நோக்கி நேற்று மதியம் ஒரு அரசு டவுன் பஸ் சென்றது. அந்த பஸ் புதன்சந்தை சர்வீஸ் சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு கிரேன் வாகனம் திடீரென பஸ் மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த ராசிபுரத்தை சேர்ந்த அமுதா (வயது 37), துறையூர் பகுதியைச் சேர்ந்த பானுமதி (53), பெரிய மணலியை சேர்ந்த ரகுவரன் (18), பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு (49), கீரம்பூரை சேர்ந்த பிரபா (38) மற்றும் கிரேனில் வந்த உரிமையாளர் சுரேஷ்குமார் ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். இதில் கிரேன் உரிமையாளர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பஸ்சில் பயணம் செய்த 5 பேர் நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக அரசு டவுன் பஸ் டிரைவர் சங்கரிடம் சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்