மோட்டார்சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு

மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.;

Update: 2022-12-14 18:45 GMT

சாயல்குடி, 

கடலாடி அருகே ஓரிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ஆத்மநாதன் மகன் வில்வ பிரதீப் (வயது 22). இவர் நேற்று முன்தினம் இரவு மலட்டாறு பகுதியிலிருந்து மோட்டார்சைக்கிளில் சாயல்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். கிழக்கு கடற்கரை சாலை மலட்டாறு பாலம் அருகே வரும்பொழுது இவருடைய மோட்டார்சைக்கிளும், காணிக்கூர் கிராமத்தை சேர்ந்த மாயழகு மகன் முனீஸ்வரன் (28) வந்த மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின. இதில் படுகாயம் அடைந்த வில்வ பிரதீப் பரிதாபமாக இறந்தார். முனீஸ்வரன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்