பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்தில் சிக்கி கட்டிட மேஸ்திரி படுகாயம்

Update: 2022-11-15 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அருகே உள்ள ஜாலியூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 54). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் பொம்மிடிக்கு கட்டிட வேலைக்கு சென்றார். பின்னர் இரவு தனது மொபட்டில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். வழியில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே தர்மபுரி மெயின் ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது தடுப்பு சுவரில் மொபட் மோதியது. இதில் கீழே விழுந்து சரவணன் பலத்த காயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்